பணி தீவிரம்!!! ரூ. 14.15 கொடி மதிப்பீட்டில் பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாடு...
Work in full swing Parangi malai Railway Station development at a cost of 14 point 15 crore
சென்னை, கடற்கரைத் தாம்பரம் வழிதடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாகத் தற்போது உருவாகி வருகிறது. சென்னையின் மின்சார ரயில் போக்குவரத்தும், மெட்ரோ போக்குவரத்தும் சந்திக்கும் பகுதியாகப் பரங்கிமலை உள்ளது. இதில் மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடம் பரங்கிமலை வழியாகச் செல்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது விரிவாக்கம் பணி செய்யப்பட்டு வரும் பறக்கும் ரயில் வழித்திட்டமும் பரங்கி மலையில் சந்திக்கிறது. இதனால்,ரயில் சாலை மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாகப் பரங்கிமலை அமைய உள்ளது. ஒரு நாளைக்கு 25000 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பரங்கிமலை ரயில் நிலையம்:
மேலும் பரங்கிமலை ரயில் நிலையத்தை ரூ. 14.15 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய பயணச்சீட்டு மையம், கூடுதல் வாகன நிறுத்தும் வசதி, பயணிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் எண்ம பலகை நடைமேடையில் கூடுதல் பயணிகள் இருக்க உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரயில் நிலையத்தின் இருபுற வாயில்களும் விரிவாக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் மார்ச் மாதத்துக்குள் முழு பணியும் நிறைவடையும், இதன் மூலம் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
Work in full swing Parangi malai Railway Station development at a cost of 14 point 15 crore