ரசாயன தொழிற்சாலையால் மல மலவெனப் பரவிய தீ.... பள்ளி கட்டடத்திற்கும் பாதிப்பு..!
Fire spreads like wildfire from chemical factory School building also affected
ஆவடி அருகே தனியார்க் கம்பெனியில் கெமிக்கலால் பயங்கரத் தீ விபத்து. பக்கத்தில் உள்ள பள்ளியிலும் தீ பரவியதால் மாணவர்களை உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
ஆவடியை அடுத்து திரு முல்லைவாயலில் தனியார்ச் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ஆலய என்ற தனியார்க் கெமிக்கல் கம்பெனியும் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று திடீரென்று கெமிக்கலால் தீ பரவியது. கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த தின்னர் மற்றும் பெயிண்ட் ரிமூவர் மூலம் தீ கொழுந்து விட்டு எறிந்தது. இதனால் வான் உயரத்திற்குக் கரும்புகை சூழ்ந்ததால் அருகே உள்ள பள்ளிக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
அதனை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பெரல்களின் இருந்த கெமிக்கல் வெடித்துத் தனியார் கம்பெனி முழுவதும் தீப்பற்றி எறிந்தது. இதனை அடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி, செங்குன்றம், அம்பத்தூர், ஜே ஜே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டினார்கள்.
பின்னர்த் தீயை அணைக்கப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு மேலாகியது. இந்தத் தீ விபத்தில் கெமிக்கல் கம்பெனியில் இருந்த அனைத்துப் பெரால்கள் எரிந்து சேதமடைந்தது. அதேபோல் லோட் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் கருகி நாசமாயின. இதனால் பள்ளி கட்டிடத்தில் பின்பகுதி எரிந்து சேதமடைந்தது. எளிதில் தீப்பற்ற கூடிய ரசாயன தொழிற்சாலையைப் பள்ளிக்கு அருகே வைக்கப்பட்டது சட்ட விரோதமான செயல் என்று, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த அமைச்சர்த் தீ விபத்துக்குள்ளான தனியார்க் கம்பெனியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிப்புக்கு உள்ளான பள்ளியின் கட்டடம் ஆய்வு செய்த பிறகே மாணவர்களைப் பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டனர்.
இந்தத் தீ விபத்து குறித்து திருமுல்லைவாயலில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
English Summary
Fire spreads like wildfire from chemical factory School building also affected