சுவையான "எள்ளு தேங்காய் சட்னி".! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஈஸியான சுவை நிறைந்த ஆரோக்கியமான எள்ளு தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1 துண்டு

எள்ளு - 1/4 கப் 

துருவிய தேங்காய் - 1/2 கப் பூண்டு - 5 பற்கள் 

உப்பு - தேவையான அளவு

வரமிளகாய் - 5

புளி - சிறிய எலுமிச்சை அளவு 

தாளிக்க:

நல்லெண்ணெய்

கடுகு

உளுந்தம் பருப்பு

கறிவேப்பிலை

பெருங்காயத்தூள் 

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு துருவிய தேங்காய், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

இதையடுத்து வதக்கிய பொருட்களை நன்றாக ஆறவைத்து, மிக்ஸியில் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான எள்ளு தேங்காய் சட்னி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Sesame coconut chutney


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->