சுவையான வால்நட் கீர்.! செய்வது எப்படி.?
How to make Tasty walnuts kheer
சுவையான வால்நட் கீர் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
வால்நட் - 1கப்
காய்ச்சிய பால் - 2 கப்
ஏலக்காய் தூள் -சிறிதளவு
குங்குமப் பூ- சிறிதளவு
சர்க்கரை-1/2 கப்
செய்முறை:
முதலில் வால்நட்டை சுடு நீரில் நன்றாக 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த வால்நட்டை சிறிதளவு பால் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு கொதித்தவுடன் மீதமுள்ள பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேவையான அளவு குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்தால் சுவையான வால்நட் கீர் ரெடி.
English Summary
How to make Tasty walnuts kheer