காரசாரமான தட்டைப்பயிறு குழம்பு எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


பயிறு வகைகளில் ஒன்றான தட்டை பயிரை வைத்து குழம்பு செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

தட்டைப்பயிறு
கத்திரிக்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
குழம்பு மிளகாய்த்தூள் 
தனி மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
புளி
நல்லெண்ணெய் 
கருவேப்பிலை
தாளிப்பதற்கு 
உப்பு
மிளகு 
சீரகம்
சின்ன வெங்காயம் 
தக்காளி
தேங்காய் 

செய்முறை:

* முதலில் தட்டப்பயிறு ஊற வைத்துக் கொள்ளவும். தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் போட்டு வதக்கி விட்டு, தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காய்த்தூள் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில், குழம்பு மிளகாய்த்தூள், தனி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கத்தரிக்காய் உள்ளிட்டவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* தற்போது இதில், புளித்தண்ணீர் மற்றும் தட்டைப்பயிறு வேகவைத்த தண்ணீர், அரைத்த மசாலா விழுது, தட்டைப்பயிறு, உப்பு உள்ளிட்டவைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான தட்டைப்பயிறு குழம்பு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make thattaipayiru kuzhambu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->