தித்திக்கும் தினை அல்வா - எப்படி செய்வது?
how to make thinai alva
தானிய வகைகளில் ஒன்றான தினையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்-
தினை
சர்க்கரை
முந்திரி
ஏலக்காய்
நெய்
செய்முறை:-
முதலில் தினையை இரண்டு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர் அதனை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலில் தினை பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும். இறுக்கமான பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு நெய் ஊற்றி அடி பிடிக்காமல் அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளற வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி அல்வாவில் போட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தினை அல்வா தயார்.