பருப்பு இல்லாமல் இட்லி சாம்பார் வைக்கணுமா? இதோ டிப்ஸ்.!!
idly sambar reciepe without dal
பருப்பு இல்லாமல் இட்லி சாம்பார் வைக்கணுமா? இதோ டிப்ஸ்.!!
சாம்பார் என்றால் பருப்பு தான் முக்கியம். சில நேரங்களில் வீட்டில் பருப்பு தீர்ந்து இருப்பதை அறியாமலேயே பெண்கள் சாம்பார் வைப்பதற்கு தயாராகி விடுவார்கள். அதன் பின்னர் தான் பருப்பு இல்லை என்பதே தெரிய வரும்.
அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள் குழப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காண இதோ ஒரு வழி. வீட்டில் கேரட் இருந்தால் போதும். அதை வைத்து பத்தே நிமிடங்களில் வித்தியாசமான இட்லி சாம்பார் செய்துவிடலாம். அதன் விவரம் பின்வருமாறு:-
தேவையான பொருட்கள் :-
சின்ன வெங்காயம் 5-7, தக்காளி - 1, கேரட் - 1 புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி அளவு, மல்லித்தூள் - ½ டீஸ்பூன், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி -¼ டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல், கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - ¼ டீஸ்பூன், ஜீரகம் - ¼ டீஸ்பூன், கருவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1/4 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1-2
செய்முறை :-
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் கேரட்டை பொடிப்பொடியாக நறுக்கி, அதனை குக்கரில் போட்டு தேவையான அளவு மஞ்சள் பொடி மற்றும் புளி சேர்த்து வேக விடவும். வெந்த பின்னர் அதனை இறக்கி வைத்துவிடவும்.
இதையடுத்து ஒரு மிக்ஸர் ஜாரில் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், தனியா மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பொடியாக அரைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
இதற்கிடையே குக்கரில் வேக வைத்துள்ள காய்கறி கலவையை மத்தைக் கொண்டு நன்கு மசித்து கொள்ளவும். இதனுடன் கரைத்து வைத்துள்ள பொட்டுகடலையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சாம்பாரை கொதிக்க விடவும். பொட்டுக்கடலையின் பச்சை வாசனை நீங்கி சாம்பார் கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
அதன் பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். இதனை சாம்பாரில் கலந்து நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை மேலாக தூவ வேண்டும். இந்த சுவையான அட்டகாசமான சாம்பாரை இட்லி அல்லது தோசை உடன் சேர்த்து சுவைத்து சாப்பிடலாம்.
English Summary
idly sambar reciepe without dal