சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் சூப்பரான புலாவ் ரெசிபி..!
Jeera pulavo Recipe
சீரகம் நமது உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது. அகத்தை சீராக்குவதால் அதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. சீரகத்தை தினமும் நமது உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. தற்போது சீரகத்தில் சுவையான புலாவ் எப்படி செய்வது என பார்போம்.
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
செய்முறை :
முதலில் அரிசியை ஊறவைத்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.
அதன்பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வானசை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.
நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடவும். சுவையான சீரக புலாவ் தயார்.