லெமனில் கேக் சாப்பிட்டு இருக்கிறீர்களா? சூப்பர் ரெசிபி உடனே செஞ்சி சாப்பிடுங்க..! - Seithipunal
Seithipunal


எலுமிச்சை பழத்தில் சாதம், ஊருகாய்,  ஜூஸ் போன்றவையே செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், எலுமிச்சை பழத்தில் கேக் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

தேவையாவை:

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 3 கப்
பால் - 1 கப்
நெய் - 1 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் கலர் - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் - 5
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

மைதாவுடன் நெய் கலந்து வறுத்து தனியே வறுத்து வைத்து கொள்ளவும். பின்னர் அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.

அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி நறுக்கிய எலுமிச்சம் பழத்தைப் போட்டு நன்றாக வதக்கி அரைத்து வைத்து கொள்ளவும்.

அடிப்பக்கம் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரையைக் கொட்டி கம்பிப்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். மைதாவை சர்க்கரை கரைசலில் சேர்க்கவும்.

இந்த கலவையில் நன்றாக நுரை வந்ததும் அதனுடன் எலுமிச்சை விழுதை சேர்க்கவும்.  லெமன் அல்லது ஆரஞ்சு கலர் சில துளிகள், வெனிலா எசன்ஸ் சில துளிகள், ஏலக்காய்த் தூள், பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு, திராட்சை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பர்பி பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டினால் சுவையான லெமன் கேக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lemon cake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->