மென்மையான, பொலிவான உதட்டை பெற என்ன செய்யலாம்..!
Lip care Tips and Solutions
அனைவருக்கும் உதடுகளை மென்மையாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டும் என விரும்புவோம். அதற்கு செய்ற்கையான பொருட்களை பயன்படுத்தாமல் பீட்ரூடை வைத்து எப்படி சரிசெய்வது என பார்போம்.
பீட்ரூடில் உள்ள வைட்டமின் சி உதட்டை இளஞ்சிவப்பாக வைத்திருக்க உதவும். அதே போல உதடுகளை சீரமைக்க உதவும். பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவ நீரேற்றமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மாறும்.
புதிதாக வாங்கிய பீட்ரூட்டை மசித்து அதில் சக்கரை கலந்து பேஸ்டாக கலந்து கொள்ளுங்கள். அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தினம் தோறும் அதனை உதட்டில் வைத்து தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி உதடு பொலிவு பெறும்.
பீட்ரூட்டை துண்டுகளாக்கி 15 முதல் 20 நிமிடங்கள் வரை சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அது நன்றாக குளிர்ச்சியடைந்த பின் உதடுகள் மீது வைத்து தேய்க்க உதடுகள் நிறம் மாறுவதை காணலாம்.
ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றை எடுத்து, சில துளிகள் எலுமிச்சை சாறுடன் நன்றாக கலந்து அவற்றை உதட்டின் மீது வைத்து தேய்க்கவும் அப்படி செய்து வர உதடுகள் பிரகாசமடையும். பீட்ரூட்டை அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் பால் சேர்த்து கொள்ளவும். அதனை லிப்மாஸ்காக உபயோகித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
English Summary
Lip care Tips and Solutions