காரசாரமான ''மாங்காய் மிளகாய் சட்னி'' ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...
Mango Chili Chutney recipe in tamil
கோடை காலங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய மாங்காயை பலவிதமாக செய்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் பொருந்தும் வகையில் வித்தியாசமான சுவையில் மாங்காய் மிளகாய் சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
புதினா
பூண்டு
இஞ்சி
பெருங்காயத்தூள்
உளுத்தம் பருப்பு
கடுகு
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் மாங்காயை நன்றாக சுத்தம் செய்து தோள் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து அதனையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாங்காய், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் காரசாரமான சுவையான மாங்காய் பச்சை மிளகாய் சட்னி தயார்.
English Summary
Mango Chili Chutney recipe in tamil