மழைக்கு வடை செய்ய போகிறீர்களா.. வழக்கம் போல சற்று வித்யாசமாக மசூர் வடை செய்து கொடுத்து அசத்துங்கள்..!
Massor Paruppu vadai Recipe
மழை நேரங்களில் சூடாக டீயுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைப்போம். அதற்காக சுவையான மசூர் பருப்பில் சுவையான வடை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவைப்படும் பொருட்கள்:
மசூர் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
கடுகு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4
இஞ்சி - 1 அங்குலம்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தழை - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
மசூர் பருப்பை ஊறவைத்து கொள்ளுங்கள்.பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பிறகு அதனை உலர்த்திய மசூர் பருப்பு கலவையுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். பருப்புக் கலவையை ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகப்பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை கலந்து கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் தேவையான அளவு கடுகு எண்ணெயை சூடாக்கவும். பருப்பு கலவையை கரண்டியில் தவாவில் இட்டு மிதமான அளவில் அழுத்தம் கொடுத்து பொரிக்க வேண்டும். சுவையான வடை தயார்.
English Summary
Massor Paruppu vadai Recipe