உங்களுக்கு முட்டை அப்பம் செய்ய தெரியுமா? நாவூற வைக்கும் சூப்பர் ரெசிபி..!
Muttai Appam Recipe
கடைகளில் வாங்குவதது போல முட்டை ஆப்பம் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
பச்சரிசி - 3 கப் தேங்காய் துருவல் - 2 கப் உளுந்து - 3 தேக்கரண்டி வெந்தயம் - 1 தேக்கரண்டி சமையல் சோடா - 3 சிட்டிகை உப்பு - சிறிதளவு முட்டை மசலாவிற்கு : முட்டை - மூன்று சர்க்கரை - அரை தேக்கரண்டி மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி நெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை :
கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து அடித்து கொள்ளவும். அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் ஊறவைத்து அரைத்து கொள்ளவும். அதனை தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்ப சட்டி காய்ந்ததும் அதில் மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.
அதன் மீது முட்டை கலவையை ஊற்றி ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.