சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி?

காய்கறி வகைகளில் ஒன்று பீர்க்கங்காய். இந்த பீர்க்கங்காய் மலச்சிக்கல் பிரச்சனைகளையும், சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் உடலில் சேரும் நச்சு கழிவுகளை வெளியேற்றுவதற்கும் இந்த பீர்க்கங்காய் உதவுகிறது. இப்படிப்பட்ட பல மருத்துவ குணங்களை உடைய இந்த பீர்க்கங்காய் உடன் வேர்க்கடலை சேர்த்து சுவையான குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

பீர்க்கங்காய், வறுத்த வேர்க்கடலை, துருவிய தேங்காய், வெங்காயம், கடுகு, சீரகம், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள்  கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி தழை

செய்முறை:-

முதலில் வறுத்த வேர்க்கடலையும் தேங்காய் துண்டுகளையும் மிக்ஸியில் போட்டு விழுது போல் அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் கொத்தமல்லி தூள் உப்பு, மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் பிணர் பீர்க்கங்காய் தண்ணீர் கொதி வந்தவுடன் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். தேங்காய் விழுதை சிறிது நிமிடத்திற்கு பிறகு சேர்த்து கொத்தமல்லி தழையை போட்டு இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை குழம்பு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peerkangai verkadalai kuzhambu recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->