சுவையான 'புதினா டிக்கி' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க
Pudhina tikki recipe tamil
வித்தியாசமான சுவையில் புதினா டிக்கி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு
புதினா
இஞ்சி
பச்சை மிளகாய்
பிரட்
பன்னீர்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் புதினாவை நறுக்கி வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை சுத்தம் செய்து 9 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
பருப்பு நன்றாக ஊறியதும் வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்துள்ள பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு பவுலில் மசித்து வைத்துள்ள பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பிரட் துண்டுகள், தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி தோசை கல்லில் எண்ணெய் விட்டு அதில் போட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான் சுவையான புதினா டிக்கி தயார்.
English Summary
Pudhina tikki recipe tamil