மூக்கைத் துளைக்கும் சின்ன வெங்காயம் தொக்கு.! - Seithipunal
Seithipunal


நாம் இதுவரைக்கும் தக்காளியில் தான் தொக்கு செய்து சாப்பிட்டிருப்போம். முதல் முறையாக சின்ன வெங்காயத்தில் தொக்கு செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் 
கடுகு 
கொத்தமல்லி விதை
வெந்தயம்
பெருங்காயத்தூள்
புளி கரைசல்
நல்லெணெய்
கடுகு உளுந்தம்பருப்பு 
கருவேப்பிலை
உப்பு 
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
பொடி செய்த வெல்லம் 

செய்முறை:

• முதலில் சின்ன வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் கடுகு, கொத்தமல்லி விதை, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* அடுப்பில் ஒரு கடாய் வைத்து  நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

• இதில், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து விட்டு வெல்லத்தை கலந்து வேகவைத்து இறக்கினால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of sinna vengayam thokku


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->