பத்து நிமிடத்தில் பக்காவான சேனை கிழங்கு சிப்ஸ்.!
senai kizhangu chips recepie
பள்ளி முடிந்து சோர்வுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஹெல்தியான, மொறுமொறுனு சேனைக்கிழங்கை வைத்து ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
சேனை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, சோம்பு, மிளகு, பூண்டு, வெங்காயம்
பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் தூள், அரிசி மாவு, பிரட் கிரம்ப்ஸ், உப்பு, எலுமிச்சை, மைதா மாவு, சில்லி ப்ளேக்ஸ், எண்ணெய்

செய்முறை;-
முதலில், சேனை கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, மிக்ஸி ஜாரில், சோம்பு, மிளகு, பூண்டு, வெங்காயம், இஞ்சி, மிளகாய் தூள், பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெந்த கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து ஆறவைத்து மசிக்க வேண்டும்.
அதில், அரைத்த விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, பிரட் கிரம்ப்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து விரல் வடிவத்தில் செய்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கரைத்தும், ஒரு தட்டில் பிரட் கிரம்ப்சை போட்டும் வைக்க வேண்டும்.
பின்னர் சேனை கிழங்கை மைதாவில் தோய்த்து, பிரட் கிரம்ப்ஸில் சேர்த்து, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான, ஹெல்தியான சேனை கிழங்கு சிப்ஸ் தயார்.
English Summary
senai kizhangu chips recepie