டேஸ்டி ஹெல்த்தி சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர்.! செய்வது எப்படி.?
Tasty and healthy Sweet beet kheer
ஆரோக்கியமான சுவை மிகுந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
சர்க்கரைவள்ளி கிழங்கு -1
பால் -1 கப்
நாட்டு சர்க்கரை - 1/4 கப்
பாதாம் -5
பிஸ்தா -5
நெய் - 2 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய் விட்டு, வேக வைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு ஒரு கப் பால் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு பால் சிறிது சுண்டியதும் பிஸ்தா, பாதாம், குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும்.
English Summary
Tasty and healthy Sweet beet kheer