டேஸ்டியான சுரைக்காய் கீர்.! செய்வது எப்படி.?
Tasty Bottle gourd kheer
டேஸ்டியான சுரைக்காய் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
துருவிய சுரைக்காய் - 1 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1 1/2கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -5
திராட்சை - 6
பாதாம் -5
ஏலக்காய் - 2
செய்முறை:
முதலில் பாலைக் காய்ச்சி, அதனுடன் சுரைக்காய்த் துருவலை சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு ஏலக்காய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு பாதாம், முந்திரி, திராட்சையை பொன்னிறமாக நெய்யில் வறுத்து சேர்த்தால் சுவையான சுரைக்காய் பாயாசம் ரெடி.