சுவையான சௌசௌ பாயசம்.! இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்.!
Tasty ChowChow payasam
சுவையான சவ்சவ் பாயசம் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
சௌசௌ - 1
சர்க்கரை - 1/2 கப்
பால் - 2 கப்
ஏலக்காய்தூள் - 1/2 டீஸ்பூன்
வெனிலா எஸன்ஸ் - 2 துளி
நெய்- தேவையான அளவு
முந்திரிப்பருப்பு
கிஸ்மிஸ்
செய்முறை:
முதலில் சௌசௌவை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த உடன் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் தூள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதாங்க சுவையான சௌசௌ பாயசம் ரெடி.