டேஸ்டியான ஹெல்தி மேங்கோ கோக்கனட் சட்னி.! செய்வது எப்படி.?
Tasty healthy Mango coconut chutney
டேஸ்டியான ஹெல்தி மேங்கோ கோக்கனட் சட்னி செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
முதலில் மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான மேங்கோ கோக்கனட் சட்னி ரெடி.
English Summary
Tasty healthy Mango coconut chutney