டேஸ்டி அண்ட் ஹெல்தி வாட்டர்மெலன் கீர்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான வாட்டர்மெலன் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

தர்பூசணி சாறு -1/2 கப் 

ஓட்ஸ் - 1/4 கப்

 பால் - 1/2 லிட்டர் 

சர்க்கரை - தேவையான அளவு

முந்திரி பருப்பு-10

பாதாம் -8

செய்முறை:

முதலில் ஓட்ஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். பின்பு பாலை நன்கு கொதிக்கவைத்து, பிறகு ஆற வைக்கவும். 

பிறகு அகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஓட்ஸ் மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறிவிடவும். 

பின்பு ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாறை ஊற்றி கிளறி இறக்கி விடவும்.

பிறகு பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்தால் சுவையான வாட்டர் மெலன் கீர் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty healthy watermelon kheer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->