அனைவருக்கும் பிடித்தமான சுவை மிகுந்த பரங்கிக்காய் கூட்டு.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் பிடித்தமான சுவையும் மிகுந்துள்ள பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையானவை:

பரங்கிக்காய் நறுக்கியது - 4 கப்

உப்பு - தேவையான அளவு

துருவிய தேங்காய் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 4

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - சிறிதளவு

தாளிப்பதற்கு

எண்ணெய்

கடுகு

உளுந்து

வெந்தயம்

கருவேப்பிலை

செய்முறை

முதலில் துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தயிர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பரங்கிக்காயைத் தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து வேக வைக்கவும். பின்பு வெந்தவுடன் கீழே இறக்கி வைத்து எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Pumpkin kootu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->