சுவையான "முள்ளங்கி சப்ஜி".! செய்வது எப்படி.!
Tasty Radish subji recipe
சுவையான முள்ளங்கி சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி நறுக்கியது - 1 கப்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். பின்பு எண்ணெய் சூடானதும் ஓமத்தை போட்டு பொரிய விடவும். பிறகு மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், இரண்டு சிட்டிகை பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.
இதையடுத்து பொடியாக நறுக்கிய முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு முள்ளங்கியில் இருந்து வெளியேறும் சாறு நன்கு வற்றும் வரை வதக்கவும். பிறகு முள்ளங்கி நன்றாக வெந்தபின்பு கொத்தமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான முள்ளங்கி சப்ஜி ரெடி.
English Summary
Tasty Radish subji recipe