சுவையான புடலங்காய் ரைத்தா! இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்.!
Tasty Snake gourd raita
சுவையான புடலங்காய் ரைத்தா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புடலங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு இவற்றுடன் புடலங்காயை சேர்த்து லேசாக வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். பின்பு தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.