ருசியான கோதுமை மாவு புட்டு.! செய்வது எப்படி.?
Tasty wheat flour puttu
ருசியான கோதுமை மாவு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
சர்க்கரை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமை மாவை, இளம் சூட்டில் வறுத்து ஆற வைக்கவும். பிறகு இதில் உப்பு, தண்ணீர், ஏலக்காய்பொடி கலந்து, புட்டு மாவு பதமாக்கவும். பின்பு புட்டுக் குழலில், தேங்காய் துருவல் போட்டு, அதன் மீது பதமாக்கிய புட்டு மாவை, முறையாகப் போட்டு, நீராவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கோதுமை புட்டு ரெடி. தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.