சருமம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதனை படியுங்கள்..!
This Drinks helps To Skin glow
சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்காக பார்லர் சென்று பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், அவற்றை விடவும் சத்தான உணவை எடுத்து கொள்வது உங்கள் சருமத்தை அழக்காக்க உதவும். எந்தெந்த உணவுகள் சாப்பிடலாம் என பார்கலாம்.
கீரை ஜூஸ் :
தேவையானவை :
நறுக்கிய கீரை - 2 கப்
ஆப்பிள் - 1 (நறுக்கவும்)
எலுமிச்சை - அரை பழம்
தண்ணீர் - முக்கால் கப்
மிளகு தூள் - சிறிதளவு
செய்முறை :
கீரை மற்றும் ஆப்பிளை கழுவி அரைத்து கொள்ளுங்கள், அதனுடன்எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து வடிக்கட்டி தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து பருகிவரலாம்.
கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம்ஈரப்பதத்தை அளிப்பதோடு, கரும்புள்ளிகளை கட்டுபடுத்தி பொலிவாக்கும்.
கேரட் -பீட்ரூட் ஜூஸ் :
தேவையானவை :
பீட்ரூட் - பாதி கேரட் -4
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை :
கேரட், பீட்ரூட்டை மிக்சியில் அரைத்து கொள்ளவும். அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு கலந்து வடிக்கட்டி குடித்து வரலாம். தேவைப்பட்டால் சிறிதளவு மிளகுதூள் சேர்த்து பருகிவரலாம்.
கேரட் மற்றும் பீட்ரூட்டில் அதிக அளவுவைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் ஊட்ட்சத்துக்கள் அதிக அளவு உள்ளன. அவை உங்கள் குடலை சுத்தம் செய்வதோடு கரும்புள்ளிகள், முகப்பருவை கட்டுப்படுத்துவதோடு வறண்ட சருமத்திற்கு உதவும்.
English Summary
This Drinks helps To Skin glow