மலச்சிக்கல் பிரச்சனை இருக்கிறதா? அப்போ நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
Vaazhaithandu Soup
சிலருக்கு மலசிக்கல் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அவர்கள் வாழைதண்டை உணவில் சேர்த்து கொண்டால் மலசிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். தற்போது சுவையான வாழைதண்டு சூப் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
வாழைத்தண்டு - 1 துண்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் இரண்டையும் மிக்சியில் போட்டு அடித்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான வாழைதண்டு கொத்தமல்லி சூப் தயார்.