இந்த பொருளெல்லாம் பிரிட்ஜில் வச்சா ஆபத்தை தான்...!
All these things are dangerous if you keep them fridge
பிரிட்ஜில் அதாவது குளிர் சாதன பெட்டியில் வைக்கக் கூடாத பொருட்கள்!
பொதுவாக நாம் சமைக்க பயன்படும் காய்கறிகள், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவற்றுள் சிலவற்றில், எந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்று பார்ப்போம்.
பூசணிக்காய்:
பூசணிக்காயை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். பிரிட்ஜில் பூசணிக்காயை வைப்பதால் அதன் சுவைகளையும், சத்துக்களையும் இழந்து விடும்.

முலாம்பழம்:
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை இழந்து விடுகிறோம். ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
வெங்காயம்:
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான இடத்தில் தான் இருக்க வேண்டும். அதிலுள்ள வாசனையை ஃபிரிட்ஜில் உள்ள பிற பொருட்கள் இழுத்துக் கொள்ளும். பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தை நாம் வாங்கி வந்தால் அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைத்து பயன்படுத்த வேண்டும்.
பூண்டு:
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூசணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரிட்ஜில் பூண்டினை வைப்பதனால் அதன் சுவை குறைந்துவிடும் மற்றும் விரைவில் கெட்டுப்போய் விடும்.
தேன்:
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்பது தேன் மட்டும் தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், பல வித பொருட்கள் கலக்கப்பட்டு கலப்படமாக வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது. தேனை பிரிட்ஜில் வைப்பதனால் அது அடர் த்தியாகி அதன் இயற்கை நிலையை இழந்துவிடும்.
வாழைப்பழம்:
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
English Summary
All these things are dangerous if you keep them fridge