மண்பாணையில் வைக்கப்படும் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!
Benefits of drinking water kept in clay pots
பண்டைய காலம் தொட்டே அலுமினிய பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்னரே நம் முதாதையர்கள் மண்பாண்டங்களில் சமையல் செய்து வந்தனர். மேலும் குடிதண்ணீருக்காகவும் மண்பாண்டகளையே பயன்படுத்தினர். கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் மண் பானைகளை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்:
இந்தக் கோடை காலத்தில் மண்பாண்டங்களில் தண்ணீர் வைப்பதால் அது இயற்கையாகவே குளிர்ச்சி அடைகிறது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குளிர்ந்த நீரை குடிப்பதன் மூலம் தொண்டைக்கு பல உபாதைகள் ஏற்படும். மண்பாண்டங்களில் இருக்கும் தண்ணீரானது குளிர்ச்சியாக இருப்பதோடு நமக்கு எந்த தொந்தரவும் செய்வதில்லை.
மண்பாண்டங்களின் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாவதால் உடல் சூட்டை தணித்து நமது உடலும் குளிர்ச்சியாக இருக்க இது உதவுகிறது.
மண்பாண்டங்களில் வைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் செரிமான கோளாறு அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சமப்படுத்துகிறது.
மண்பாண்டங்களில் வைக்கப்படும் தண்ணீரானது அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்களின் காரணமாக ன நம் உடலின் குளுக்கோஸ் அளவை பராமரிக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை நிலவு உயராமல் பார்த்துக் கொள்கிறது.
மண்பாண்டங்களில் இருக்கும் தண்ணீர் மாசுக்கள் மற்றும் கிருமிகள் வராமல் பார்த்துக் கொள்கிறது. மண்பாண்டங்களில் வைக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் தொண்டை எரிச்சல், இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. மேலும் இது இயற்கையாக குளிர்விக்கப்பட்ட குடிநீரை கொண்டிருக்கிறது.
English Summary
Benefits of drinking water kept in clay pots