அடடே.... நாவல் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் கிடைக்கும் சீசன் பழமான நாவல் பழத்தில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல்வேறு வைட்டமின்களும் தாது உப்புகளும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. மேலும் இது நம் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தக் கூடிய பண்புகளை கொண்டிருக்கிறது.‌ இவற்றின் கிளைசெமிக் குறியீடு மிக மிக குறைவு  இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகளும் இந்த பழத்தை பயன்படுத்தலாம். இது வைட்டமின் சி அதிக அளவை கொண்டுள்ள பழமாகும். நாவல் பழங்களை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் எல்லாம் உடலுக்கு கிடைக்கும் என பார்ப்போம்.

நாவல் பழம் வயிற்றுப்போக்கிற்கு சிறந்த மருந்தாக பயன்படக்கூடிய ஒன்றாகும். இதிலிருக்கும் அமில பொருட்கள் நம் வயிற்றில் செரிமானத்தை சீறாக்குவதோடு வயிற்றுப்போக்கும் சிறந்த தீர்வாக அமையும்.

நாவல் பழங்களின் விதைகள் மிகச் சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இவற்றை காய வைத்து அரைத்து அதனை தயிருடன் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் நீங்கும்.

நாவல் பழங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை  கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இந்தப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வர மாரடைப்பு ஏற்படுவது போன்ற வாய்ப்பு குறையும்.

நாவல் பழங்கள் சரும நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. இவை தோளில் ஏற்படும் வெண்புள்ளி பாதிப்பை தடுக்கவும் உதவுகின்றன.

இவை பழங்களில் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவை. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வைக்கிறது‌. மேலும் நாவல் பழம் ரத்த அழுத்தத்தின் அளவையும்  கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு முக்கியமான காரணியாகும்.

நாவல் பழங்களின் இலைகளை பொடி செய்து அவற்றை வைத்து பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல பளிச்சென்று ஆவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of eating jamun fruit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->