மலச்சிக்கல், உடல் சூடு, முதிர்ந்த முகம்.. பழைய சோறு ஒன்றே போதும்.. மறந்து போன மருந்து.! - Seithipunal
Seithipunal


கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டை தணிக்க நாம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கிறோம். ஆனால் நமது பழைய வாழ்க்கை முறையை மறந்து விட்டது தான் இன்றைய பெரும் பிரச்சனை என்பதை நாம் நினைவு கூறுவதில்லை.

பழைய சோறை சாப்பிடுவது உடலுக்கு அதிக அளவில் நன்மையை கொடுக்கிறது என்றாலும் பலருக்கும் இது பிடிப்பதில்லை. ஒரு காலத்தில் பழைய சோறை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த வயதானவர்கள் கூட இப்போது அதை மறந்து விட்டார்கள்.

அதுதான் நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பிரச்சனைகளுக்கும் காரணம். பழைய சோறு சாப்பிடுவது அன்றைய நாளுக்கான எனர்ஜியை கொடுத்து நம்மை சுறுசுறுப்புடன் வைத்திருக்கிறது.

இது உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல் விட்டமின் பி6 மற்றும் பி 12 உள்ளிட்ட சத்துக்களையும் உடலுக்கு வாரி வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல் சிறு குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை கொன்று உடல் உறுப்புகளை காப்பாற்றுகிறது. 

அத்துடன் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வு. சாப்பாடு எளிதாக ஜீரணமாக இது உதவும். ரத்த நாளங்களின் குறைபாடுகளை போக்கி அல்சர் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. உடலில் ஏற்படும் ஹைட்ரேசன் பிரச்சனைகளை இது தவிர்க்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of pazhaiya soru


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->