புகைப்பழக்கத்தை போக்கும் செவ்வாழை..!
benefits of sevvazhai
பழவகைகளில் ஒன்றான செவ்வாழையில் குறைவான கலோரி அளவு மற்றும் அதிகமான நார்ச்சத்து காணப்படுகிறது. இது உடல் எடைக் குறைவதற்கு முக்கிய காரணமாகும். செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால், சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன.
செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடியில் பொடுகு நீங்குவதுடன், வறட்சியும் குறைகிறது.
மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மூலத்தை குணப்படுத்த உதவுகிறது. புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதனை கைவிட செவ்வாழைப் பழம் உதவுகிறது.