சாப்பிட்ட பின் நடப்பதால் இத்தனை நன்மைகளா?
benefits of walking 10 minutes after eat
இரவில் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* இரவு உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
* உணவுக்குப் பின் உடனே உட்கார்ந்திருப்பது அல்லது படுப்பது நல்ல செரிமானம் அடையச் செய்யாமல் கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கிறது. அதனால், உணவுக்குப் பிறகு குறுகிய நடைகளைச் சேர்ப்பது எடை மேலாண்மைக்கு சிறந்தது.
* தினமும் வழக்கமான நடைபயிற்சியைச் சேர்ப்பது நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
* ஒவ்வொரு வேலையும் உணவுக்குப் பின்னர் 10 நிமிடம் நடப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியதாக அமைகிறது.
* உணவுக்குப் பின்னதாக நடைபயிற்சி செய்வது வயிறு மற்றும் குடல் வழியாக உணவை சீராகச் செல்ல ஊக்குவிக்கிறது. வீக்கம் மற்றும் அஜீரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
English Summary
benefits of walking 10 minutes after eat