கொத்தவரங்காயை இப்படியும் செய்யலாமா?
Cluster beans dall usuli recipe
கொத்தவரங்காயை இப்படியும் செய்யலாமா? அப்போ இதை செய்து சாப்பிடுங்க..!
கொத்தவரங்காயை இதுவரைக்கும் சாம்பார், காரக்குழம்பு, பொரியல் என்று தான் அனைவரும் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இப்போது புதிதாக கொத்தவரங்காயை வைத்து பருப்பு உசிலி செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருள் :-
கொத்தவரங்காய்
கடலை பருப்பு
துவரம் பருப்பு
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
கடுகு
எண்ணெய்
உப்பு
செய்முறை :-
முதலில் கொத்தவரங்காயை கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணையை ஊற்றி நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காயை போட்டு அதில், சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் ஊறவைத்த துவரம் பருப்பு, கடலை பருப்பை எடுத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடு போட்டு தாளித்து அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதனுடன் கொத்தவரங்காயை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால் சூடான கொத்தவரங்காய் பருப்பு உசிலி ரெடி.
English Summary
Cluster beans dall usuli recipe