தொடர்ந்து முடி கொட்டிக் கொண்டே இருக்கிறதா? உங்களுக்கான சூப்பர் ஆயில் இதோ.! - Seithipunal
Seithipunal



பெண்கள் என்றால் அழகு கொடுக்கும் கருப்பான கூந்தலை பராமரிப்பதற்காக வேதிப்பொருட்கள் கலந்த பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்துகிறோம். இதனால் பலருக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

* முடி வளர்ச்சிக்காக ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன் நிம்மதியான தூக்கமும் முக்கியமான ஒன்று. மன உளைச்சல் இல்லாமல் இருப்பது, தேவையில்லாமல் கெமிக்கல் கலந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். 

* முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு எண்ணெய்யை பயன்படுத்தினால் போதும். முடி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு முக்கிய மூலிகையாக கேசவர்த்தினி இலை உள்ளது. கேசவர்த்தினி இலையை நர்சரியில் வாங்கி வீட்டில் வளர்த்து எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். 

* செடி கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கேசவர்த்தினி பொடி கிடைக்கும். அதனை வாங்கி பயன்படுத்தலாம். எண்ணெய் தயாரிக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவை அதில் சிறிதளவு வேம்பாலம்பட்டை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். 

பின்னர் கேசவர்த்தினி இலையை பறித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேம்பாலம் பட்டை எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய்த்து பின்னர் அதில் கேசவர்த்தினி இலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். 

* இரவு முழுவதும் எண்ணெயில் கேசவர்த்தினி இலை நன்கு உரிய பின்னர் காலையில் வடிகட்டி பயன்படுத்தி கொள்ளவும். அதிகமான தீயில் வைத்து எண்ணெயை சூடு படுத்தி கேசவர்த்தினி இலையை போடக்கூடாது. எப்பொழுது சூடு படுத்தினாலும் மிதமான தீயில் காய வைக்க வேண்டும். வடிகட்டிய எண்ணையை உறங்குவதற்கு முன்பு தலையில் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு மறுநாள் காலை சீயக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி  தலைமுடியை அலசி விடுங்கள்.

* பகல் நேரத்தில் அரை மணி நேரம் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து பின்னர் தலைமுடியை அலசி கொள்ளலாம். இதனை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகி முடி நன்கு வளர ஆரம்பிக்கும். கேசவர்த்தினி இலையில் முடி வளர்ச்சியை தூண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Constant hair loss control oil


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->