உங்க வாய் சுத்தமா இருக்கா??? இல்லேன்னா இந்த பிரச்சனை வரலாம்! - Seithipunal
Seithipunal


நம் உடல் ஆரோக்கியம் என்பது பல்வேறு வகையான உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் சேர்ந்து குறிப்பிடுவதாகும். எல்லா உறுப்புகளையும் சுத்தமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். வாய் ஆரோக்கியம் மற்றும் அதன் சுத்தம் என்பது  உடல் நலத்தில் முக்கிய பங்கு வைக்கக் கூடியது. நம் வாயின் ஆரோக்கியமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்று பார்ப்போம்.

 எண்டோகார்டிடிஸ்:
நம் இதயத்தின் ஆரோக்கியம் என்பது  வாய் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. சில நேரங்களில் வாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள்  நம் இதயத்தில் எண்டோகார்டிடிஸ்  தொற்றை ஏற்படுத்துகின்றன. இந்த எண்டோகார்டிடிஸ் என்பது இதயத்தின் உட்புறச் சுவர்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒருவித தொற்று  ஆகும்.

 நிமோனியா:
நிமோனியாவிற்கும் வாய் சுத்தத்திற்கும்  நேரடியான தொடர்பு இல்லை என்றாலும்  மோசமான வாய் சுகாதாரம் காரணமாக  பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் வாய் மூலமாக நுரையீரலை சென்றடைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறுகளை உருவாக்கலாம்.

கர்ப்ப பிரச்சனைகள்:
பற்களை சுற்றியிருக்கும் ஈறுகள் மற்றும் மென்மையான திசுக்களின் சிதைவு பீரியண்டோன்டிஸ்டுக்கு வழி வகுக்கிறது. இதன் காரணமாக குறைவான எடையில் குழந்தை பிறத்தல்  மற்றும் குறைமாத குழந்தை பிறப்பு போன்ற  போன்ற கர்ப்ப கால பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diseases that might affect when we are not aware about oral hygine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->