வெறும் வயிற்றில் தப்பி தவறிக்கூட உண்ண கூடாத உணவுகள்.!  - Seithipunal
Seithipunal


அனைவரும் காலை எடுத்துக் கொள்ளும் உணவானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்பவர்கள், காலை உணவு தான்  தேவையான எனர்ஜியை கொடுக்கக் கூடியது.

மேலும்  இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலையில் தான் வெகு நேரம் கழித்து உணவு உண்ணுகின்றனர். இதனால், காலை உணவு மிகவும் முக்கியம் வாய்ந்தது. இதில் காலையில் அருந்தக்கூடாத உணவுகள் என்றால், ஒன்று காபி ஆகும்.

காபியில் அமிலத்தன்மை உள்ளதால் நெஞ்சு எரிச்சல், இரைப்பை அலர்ஜி, வாந்தி போன்றவையை ஏற்படுத்தும் .

இதனால் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவது நல்லது. இரண்டாவது வாழைப்பழம் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. இதில் மேக்னீசியம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் கலந்து மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் மெக்னீசியம் கால்சியம் இரண்டும் சம பங்கு இல்லாமல் இருக்கும். இதனால் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் காலை வெறும் வயிற்றில் இனிப்பு பதார்த்தங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த இனிப்பானது உடலில் இன்சுலின் சுரப்பை பாதிப்படையச் செய்யும். மற்றும் வெறும் வயிற்றில் பச்சையான தக்காளியை சாப்பிடக்கூடாது. சிலர் தக்காளியை சமைத்து உண்ணாமல் அப்படியே உண்பர். அதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு தக்காளியை சாப்பிட்டால் இரைப்பையில் புண்களை உண்டாக்கும். 
 
மேலும் வெறும் வயிற்றில் தயிர் போன்ற புளித்த பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். மற்றும் பேரிக்காய் வெறும் வயிற்றில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் இதை சாப்பிடுவதால் இரைப்பை மற்றும் குடலில் பிரச்சனைகளை உண்டாக்கும். மற்றும் வெறும் வயிற்றில் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு குளிர்பானங்கள் அருந்துவதால் அவை வயிற்றுப் பகுதியில் செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடுகிறது. இதனால், உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Eat These Item In Empty stomach 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->