அட.. ஸ்விக்கியின் சைவ உணவு ஆர்டர்களில் முதலாவதாக இருப்பது இந்த நகரம் தானாம்..!! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் இப்போதெல்லாம் உணவகங்கள் பலவும் வீட்டுக்கே உணவு விநியோகம் செய்து வருகின்றன. அந்த வகையில் சைவ உணவுகள், அசைவ உணவுகள், பாஸ்ட்ரி வகைகள் என்று அனைத்து விதமான உணவு வகைகளையும் வீட்டிற்கே விநியோகம் செய்வதில் ஸ்விக்கி, ஜோமட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

அந்தவகையில் ஸ்விக்கி நிறுவனமானது "கிரீன் டாட் விருதுகள்" குறித்த அறிவிப்பை வெளியிடும் போது, ஸ்விக்கி மூலம் சிறந்த சைவ உணவு விற்பனையான உணவகங்கள் குறித்தும் ஸ்விக்கி வெளியிட்டது. அதில் அதிக அளவு சைவ உணவுகளை ஆர்டர் செய்த நகரமாக "பெங்களூரு" உள்ளது. 

பெரும்பாலும் ஐடி நிறுவன ஊழியர்கள் காலை வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவில் பெங்களூரு ஸ்பெஷல் மசாலா தோசை, வடை, பொங்கல், இட்லியை அதிகளவில் ஆர்டர் செய்து உண்பதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 

இதையடுத்து 2ம் இடத்தில் மும்பையின் தால் கிச்சடி, பிட்சா, பாவ் பாஜி ஆகியவையும், 3ம் இடத்தில் ஹைதராபாத்தில் மசாலா தோசை மற்றும் இட்லியும் அதிகளவில் ஆர்டர் செய்யப் பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் சமோசா, பாவ் பாஜி, மார்கரிட்டா பிட்சா தேசிய உணவு போல் மாறி வருகிறது. மேலும் வாரம் தோறும் சாலட் வகைகள் மட்டுமே 60, 000க்கும் மேலான ஆர்டர்களைப் பெறுகின்றன" என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 

இதையடுத்து "சிலிக்கான் வேலி" என்று அழைக்கப் படும் பெங்களூரு, சைவ உணவு பிரியர்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகஇனி  "வெஜிடேரியன் வேலி" என்று அழைக்கப் பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do You Know Which is The Top Most Vegeterian Orders Given City Through Swiggy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->