உங்க உடம்பில் இந்த குறை இருந்தால்.. சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ.! - Seithipunal
Seithipunal


வைட்டமின் பி12 நம் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு வைட்டமின் ஆகும். இது உடலில்  ஆக்சிஜனை பல்வேறு பகுதிகளுக்கும் கடத்துவதற்கு உதவுகிறது. மேலும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வைக்கிறது. இயற்கையாக இவை என்னென்ன உணவுகளில் நிறைந்திருக்கின்றன என்று பார்ப்போம்.

இறைச்சி :

ஆடு, மாடு, மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி12 இயற்கையாகவே அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒரு இறைச்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் பி 12 சத்து நம் உடலுக்கு அதிக அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

பால் மற்றும் பால் பொருள்கள்:

பால் மற்றும் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய், தயிர், வெண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின் பி12 அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் அந்த குறைபாட்டை போக்கலாம்.

முட்டை :

முட்டை வைட்டமின் பி2 வலிக்கு சிறந்த ஒரு மூலமாகவும் தினமும் காலை உணவில் முட்டையை சேர்ப்பதன் மூலம்  வைட்டமின் பி12 சத்து அதிக அளவில் நம் உடலுக்கு கிடைக்குமாறு செய்யலாம்.

கடல் உணவுகள் :

கடல் உணவுகளான மீன் மற்றும் மீன் எண்ணெய்களில் வைட்டமின் பி12  அதிக அளவில் காணப்படுகிறது. சால்மன் மீனில்  வைட்டமின் பி12 சத்து நிறைந்து காணப்படுகிறது இதை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் பி12 சத்து கிடைக்கிறது.

ஈஸ்ட் :

பிரட், பாஸ்தா நூடுல்ஸ் போன்ற ஈஸ்ட் நிறைந்திருக்கும் உணவு பொருட்களும்  வைட்டமின் பி12 சத்துக்களை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டு வைட்டமின் பி12 சத்துக்களை நாம் பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont worry if you are deficient in vitamin B12 take these foods daily


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->