பித்த வெடிப்பால் அவதி அடைகிறீர்களா?.. உங்களுக்காக சில டிப்ஸ்.!
easy ways get rid cracked heels
பாத வெடிப்புகளை குணப்படுத்துவதில் மருதாணி முக்கியத்துவமாக உள்ளது. மருதாணி இலைகளோடு மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தூங்குவதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு பின்னர் பூச வேண்டும்.
இவ்வாறு சில வாரங்கள் தொடர்ந்து பூசினால் பாத வெடிப்பு நீங்கும். குதிகால் வெடிப்பை நீக்க சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி மென்மையாக மாறிவிடும். ஊற வைத்த கால்களை சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்புகள் மறையும்.
பாதங்களில் உண்டாகும் பித்தவெடிப்புகளில் கிருமிகள் அதிக அளவில் இருக்கும் கிருமிகளை நீக்குவதற்கு மஞ்சள் தூள், நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து தடவி வரலாம்.
இதன் மூலம் வெடிப்புகளில் உள்ள கிருமிகள், வலி, எரிச்சல் போன்றவை குணமடையும். குதிகால் வெடிப்புக்கு மிகச்சிறந்த நிவாரணமாக மசாஜ் உள்ளது.
பாதங்களில் உள்ள சருமங்கள் வறண்டு போகாமல் பாதுகாக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இரண்டையும் சம அளவு எடுத்து மசாஜ் செய்வதன் மூலம் பித்த வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
English Summary
easy ways get rid cracked heels