இந்த அறிகுறியெல்லாம் இருந்தால் புற்றுநோயாக இருக்கலாம் உஷார்.!
Explanation about cancer symptoms Types and causes
கேன்சர் என்பது இன்று நம் நாட்டில் வேகமாக பரவி வரக்கூடிய ஒரு நோயாகும். கடந்த ஆண்டில் மட்டும் 14,61,427 பேருக்கு கேன்சர் நோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 பேரில் ஒன்பது பேர் தங்கள் வாழ்நாளில் கேன்சர் நோயினால் தாக்கப்படுகிறார்கள். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த விகிதம் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நவீன மருத்துவத்தின் முன்னேற்றத்தினால் இந்த நோயினை குணபடுத்த முடியும் என்றாலும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியமாகிறது. எந்த மாதிரியான புற்றுநோய்களை கண்டறிய என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் இருக்கின்ற என்று நாம் இந்த பதிவில் பாப்போம்.
மார்பக புற்றுநோய்:
இந்தியாவில் 25 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள்
தெரிவிக்கின்றன.இந்தவயதை கடந்த பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்கள் சுய பரிசோதனை மூலம் தங்களின் மார்பகங்களில் ஏதேனும் வலி அல்லது மாற்றங்கள் இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி வலி இருப்பின் மருத்துவரை கலந்தாலோசித்து மேமோகிராஃபி மூலம் ஸ்கிரீனிங் செய்து முன்கூட்டியே கண்டறிந்து கொள்ளலாம்.
வாய் புற்றுநோய்:
இந்தியாவில் முதன்மையாக இருக்க கூடிய புற்றுநோய் இதுவாகும் அதிகப்படியான புகையிலை மற்றும் புகைபிடிப்பதினால் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது. அதிகளவு அருந்துவதும் இதற்கு ஒரு முக்கிய காரணி. இந்த நோயை கண்டறிய வாயில் வெள்ளை அல்லது சிவப்பு திட்டுக்கள் இருகிறதா என சோதனைகள் மூலம் கண்டறியலாம். மேலும் தொண்டை அல்லது வாயில் கட்டிகளிருந்தாலும் அவை அகற்றப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் கண்டறிந்து கொள்ளலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்:
மார்பக புற்றுநோய்க்கு அடுத்து இந்தியாவில் பெண்களை அதிகமாக தாக்க கூடிய புற்றுநோய் இதுவாகும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து புற்றுநோய் கட்டியாக மாறும் முன்பே குணப்படுத்த முடியும். இந்த நோயை கண்டறிவதற்கு என பாப் ஸ்மியர், விஐஏ மற்றும் எச்பிவி. போன்ற பரிசோதனைகள் இருக்கின்றன.
புற்றுநோயின் அறிகுறிகள் :
வாயில் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுகள்,உடலின் எந்த பகுதியிலும் உருவாகும் கட்டி,உடலின் எந்த உறுப்பிலும் ஏற்படும் அதிகமான ரத்த போக்கு, மச்சம் அல்லது மருவில் மாற்றம், எச்சில் விழுங்குவதில் சிரமம் மற்றும் சிறுநீர்பை அல்லது குடல் இயக்கத்தில் மாற்றம் ஆகியவை இருப்பின் மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெற்று வருமுன் காத்து கொள்ளலாம்.
English Summary
Explanation about cancer symptoms Types and causes