வயதானாலும் இளமையாகவே தெரிய வேண்டுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் உணவு முறை மற்றும் காலநிலை மாற்றத்தால் சரும நோய்கள் அதிகளவில் வருகின்றது. அதிலும் குறிப்பாக முகத்தில் சுருக்கங்கள், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவம் மாறுவது உள்ளிட்டவை ஏற்படும்.

இதனை மருத்துவ ரீதியாக சரி செய்யாமல், இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பயன்படுத்தி சரி செய்வது குறித்து காண்போம்.

 1. சருமப் பிரச்சினைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது விளக்கெண்ணெய். தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

 2. அன்னாசி பழத்தை துண்டுகளாக நறுக்கி விழுதுபோல் அரைத்து வாரம் ஒருமுறை முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்சைம் இறந்த செல்களை நீக்கி சருமத்தில் இளமைக்கான பளபளப்பை தரும்.

 3. வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது பேஸ்ட் முகத்தில் பேக் போட்டுக் கழுவி வர முகம் பளபளக்கும்.

4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத்தோற்றம் எளிதில் ஏற்படாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையம் தோன்றும்.

5. தினமும் இரவு உறங்கச்செல்லும் முன்பு காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து நெற்றி, கண்களின் ஓரம் என்று முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

 6. கடலை மாவுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

7. நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும். 

8. இதைவிட எளிதாக உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

 9. கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொண்டால், முதுமையைத் தள்ளிவைக்கும்.

10. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என்று தடவி செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்துவர, வயது ஆனாலும் குறைவாகவே தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face pack beauty tips


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->