வெயில் காலத்தில் உதடுகள் வறண்டு போகாமல் மிருதுவாக இருக்க இதோ சில டிப்ஸ்.! ட்ரை பண்ணி பாருங்க!
Follow these tips for dry and chapped lips
கோடை காலத்தில் விடுமுறை போன்ற மகிழ்ச்சியான விஷயங்கள் பல இருந்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நமது உடலுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று நமது உதடுகள் வெயிலின் காரணமாக வரட்சியாகி வெடித்து அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம் என்று பார்ப்போம்.
நமது உதடுகள் வறண்டு போய் வெடித்து இருப்பதினால் அசௌகரியங்கள் ஏற்படுவதோடு அதிகமான வலியையும் ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க லிப் பாம்களை பயன்படுத்தி நமது உதடுகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இவற்றில் சியா வெண்ணெய, தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட லிப் பாம்களை பயன்படுத்துமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் உதடுகள் வரட்சியாவதை தடுக்க வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இவற்றில் இருக்கக்கூடிய விட்டமின்கள் நம் உதடுகள் வறண்டு போகாமல் நீர் ஏற்றத்துடன் இருக்க உதவும்.
மேலும் வெயில் காலத்தில் ஏற்படும் நீரிழப்பின் காரணமாகவும் நமது உதடுகள் வறண்டு வெடிப்பு ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்ப்பதற்கு அதிகமான அளவு தண்ணீர் குடித்து நமது உடலை நீரேற்றத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் அத்தியாவசியம் வேலை இருந்தால் குடை மற்றும் தொப்பி போன்றவற்றை பயன்படுத்தி நமது முகத்தில் நேராக வெயில் அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளை வெயில் காலங்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உதடு வெடிப்பு போன்ற அசோகரியங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.
English Summary
Follow these tips for dry and chapped lips