சருமத்தை மென்மையாக மாற்றும் ''நெய்'' இப்படி பயன்படுத்தி பாருங்க..!
Ghee skin glow tips
நெய்யில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. இது சருமம் மற்றும் கூந்தல் இரண்டிற்கும் ஈரப்பதத்தை வழங்கி நீரோட்டத்தை அதிகரிக்கும். நெய் ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்ததாக உள்ளது.
வறட்சியை போக்கி சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும். நெய் வைத்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
* சிலருக்கும் பனிக்காலத்தில் உதடுகள் வறட்சியாக அல்லது வெடிப்புடன் காணப்படும். லிப்ஸ்டிக் அதிகமாக பயன்படுத்தினால் உதடுகளில் சுருக்கங்கள் ஏற்படும். மேலும் நீரிழிவு, தண்ணீர் பற்றாக்குறை, அதிகம் வெயில் படுவது போன்ற காரணத்தினாலும் உதடு வறட்சியாக இருக்கும்.
* இதனை சரி செய்ய இரவு தூங்கும் பொழுது உதட்டில் நெய் பூசி கொண்டால் வறட்சியை நீக்கி மென்மையாக மாற்றும். சருமத்தில் வறட்சி அதிகமாக இருந்தால் நெய்யை பயன்படுத்தலாம்.
* சிறு துளி நெய்யை எடுத்து சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் சருமம் மென்மையாக மாறும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து இதை செய்தால் சரும வரட்சி முற்றிலும் நீங்கும்.
* முகத்தில் எண்ணெய் பசை இருந்தால் மட்டுமே முகப்பருக்கள் வரும். எண்ணெய் போல் இருக்கும் நெய்யை பயன்படுத்துவதால் முகப்பரு எப்படி போகும் என நினைக்கலாம்.
* ஆனால் நெய்யில் அதிக அளவில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் முகத்தில் தேவையற்ற பருக்களை தடுக்கும். சருமம் ஊறிதல், நீரிழிப்பு போன்றவற்றை சரி செய்யும். தூங்கும் பொழுது முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி பிறகு நெய் தடவி மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் முகம் பளிச்சென்று மாறும்.
* கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை நீக்குவதற்கு நெய் பயன்படுத்தலாம். நெற்றியில் சுருக்கம், கோடு போன்றவை வராமல் இருக்க நெய்யில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடயன்கள் உதவுகிறது.
* நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றிகள் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தை போக்க உதவும். அதே போல் கண்ணுக்கு கீழ் உண்டாகும் வீக்கத்தையும் மசாஜ் செய்வதால் குறைக்க முடியும்.
* நெய் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள வடுக்கள், காயங்கள், கரும்புள்ளிகள், கட்டிகள், ஆறாத ரணங்கள், தீக்காயம், முகப்பரு போன்றவை குணமடையும்.