என்றும் இளமையாக இருக்க கொய்யாப்பழம் ஃபேஸ் மாஸ்க் !
Guava face mask for younger looking skin
கொய்யாப்பழம் என்பது இந்தியாவில் பரவலாக கிடைக்கக்கூடிய ஒருசத்து நிறைந்த பழ வகையாகும்.
இதில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நார்ச்சத்துக்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.
மேலும் இது ஆன்ட்டி ஆக்சிடெண்ட் களின் சிறந்த மூலமாகவும் வழங்குகிறது.
கொய்யாப்பழம் ஆனது உடலுக்கு ஆரோக்கியமானதாக மட்டுமல்லாமல் சர்ம ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கிறது.
இவை சருமத்தை பொலிவூட்டவும், புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமம் பாதிப்படைவதை தடுக்கின்றன.
இத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ள கொய்யா பழத்தினை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்து நமது சருமத்தை பளபளப்பாக வைப்போம்.
தேவையான பொருட்கள் :
கொய்யாப்பழம் - 1/2
வாழைப்பழம் - 1
தேன் - 1 டீ ஸ்பூன்
தயிர் - ½ டீ ஸ்பூன்
செய்முறை :
கொய்யாப்பழத்தையும் வாழைப்பழத்தையும் நன்றாக மசித்து பேஸ்ட்டாக ஆக்கிக்கொள்ளவும். அந்த பேஸ்ட்டில் தேன் சேர்த்து கலந்து முகத்தில் முழுக்க தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து காய்ந்தபின் கழுவி விடவும். தினமும் இவ்வாறு செய்வதினால் முகம் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக இருக்கும்.
English Summary
Guava face mask for younger looking skin