முடி கருமையாக வளர வேண்டுமா? - இதை மட்டும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


ஒருவருக்கு அழகு சேர்ப்பது அவரது தலை முடிதான். அந்த முடி கருப்பாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இதற்கு நமது உடலில் வைட்டமின் பி-5 சரியான அளவில் இருக்க வேண்டும். இதன் சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.

'வைட்டமின் பி5' எல்லா இயற்கை உணவுகளிலும் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது. 

இவை தவிர கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் அதிகமுள்ளது.

மற்ற வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் இந்த வைட்டமின் பி5 முக்கியப் பங்காற்றுகிறது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வளர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hair growth tips


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->