சூரிய உதயத்திற்கு முன்பு வாக்கிங் போறீங்கலா.? மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


உடற்பயிற்சிகள் நம் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. அவை நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் நம் மனநலம் சார்ந்த  ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு என்று  குறிப்பிட்ட கால அளவுகள் உள்ளது.

சிலர் தங்களது நேரமின்மையின் காரணமாக அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே தங்களது நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை தொடங்குவார்கள். இது எல்லோருக்கும் ஆரோக்கியமான ஒன்று அல்ல.

நம் உடலானது காலை எழுந்தவுடன் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி செல்லும்போது அது நமது ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருக்கின்றது.

சூரிய உதயத்திற்கு பின்  நடைபயிற்சியில் ஈடுபடும் போது  நம்மால் வைட்டமின் டி அதிக அளவில் பெற முடியும். சூரிய உதயத்திற்கு முன் பயிற்சி செய்வதனால் இந்த பலனை நாம் அடைய முடியாது.

ஒரு சில ஆய்வு முடிவுகளின் படி  அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை நம் உடலானது கார்டிசோல் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது நமது மெட்டபாலிசத்திற்கு அதிக அளவில் உதவி புரியும். மேலும் இந்த அதிகாலைப் பொழுதுகளில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான பலன்களை இரு மடங்கு அடையலாம் என்று  தெரிவிக்கின்றன.

பொதுவாக சூரிய உதயத்திற்கு முன்பு நாம் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்யலாமா என்பதை ஒருவரின் தனிப்பட்ட உடல் அமைப்பு மற்றும் அவரது நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஏராளமான நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்  அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்பே உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harmfull effects of morning walk before sunrise


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->