பல்லிகளின் தொல்லையிலிருந்து விடுபட சில டிப்ஸ்.! ட்ரை பண்ணி பாருங்க! - Seithipunal
Seithipunal


பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி ஆனால் பல்லியை கண்டாலும் படைகள் நடுங்கும் என்பது இல்லத்தரசிகளுக்கு பொருந்தும். நம் வீட்டிலோ அல்லது சுவரிலோ இருக்கும் பல்லியை பார்த்து அஞ்சாத இல்லத்தரசிகளை காண்பது விதிவிலக்கு.

வீட்டில் அங்கும் இங்கும் நடமாடும் பல்லிகள் சில நேரங்களில் தவறுதலாக உணவுப் பொருள்கள் மீது விழுந்தால் அவை உணவுப் பொருட்களை அசுத்தப்படுத்துவதோடு  அந்தப் பொருள்களும் விஷமாகிவிடும். இதனால் பல்லிகளை நம் வீட்டை அண்டாதவாறு  செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் நாம் நமது வீட்டை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தரை மற்றும் உட்புறச் சுவர்களை கிருமி நாசின்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல்களையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வைத்திருப்பதன் மூலம் பூச்சிகள் அவற்றை அண்டாது. இதன் காரணமாக பல்லி வருவது குறையும்.

வெங்காயத்தின் வாசனைக்கு பல்லிகள் அண்டாது வெங்காயத்தை வெட்டியோ அல்லது அவற்றின் சாற்றை சுவரில் தெளித்து வைத்தாலோ பல்லிகள் அந்த இடத்திற்கு வராது.

 சுவர்களுக்கு எதிரில் மர சாமான்களை வைத்தால் பல்லிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த நாம் பயன்படுத்திவிட்டு வீசும் முட்டை ஓடுகளை  வைத்தால் அங்கு பல்லிகள் வருவது கட்டுப்படுத்தப்படும். முட்டை ஓடிலிருந்து வரும் வாசம் பல்லிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாப்தலின் உருண்டைகளின் வாசத்திற்கு பல்லிகள் ஓடிவிடும். எனவே வீட்டில் ஆங்காங்கு நாப்தலின் உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம் வீட்டில் பல்லி  தொல்லையிலிருந்து தப்பிக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here are some tips to get rid of lizards


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->