கருமையான, அடர்த்தியான முடி வேண்டுமா.?! ஹோம்மேட் செம்பருத்தி எண்ணெய்.! இன்றே செய்து பாருங்க.! - Seithipunal
Seithipunal


பெண்கள் நீளமான, பளபளப்பான கூந்தலை அதிகமாக விரும்புவர். ஆனால் அழுக்கினை போக்குவதற்காக உச்சந்தலையில் சேர்க்கும் இரசாயனபொருட்கள் தலைமுடியில் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

பாராபன்கள் மற்றும் ரசாயனங்கள் இல்லாத இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் பாதிப்பை சரிசெய்ய இயலும்.

அதில் ஒன்றுதான் செம்பருத்தி. இது தலை முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியை கருமையாக்குகிறது. அத்துடன் சிறந்த கண்டிஷனராக விளங்குகிறது.

செம்பருத்தி எண்ணெய் செய்வது எப்படி ?

குறைந்தது 7-8 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு செம்பருத்திப் பூக்களை எடுத்து அதனுடன் சேர்த்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி விழுதாக அரைக்க வேண்டும்.

மகரந்தத்தை தவிர்த்து முழு பூவையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, செம்பருத்தி விழுதினை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

விருப்பப்பட்டால் நெல்லிக்காய் தூள், கறிவேப்பிலை, உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய் நன்கு கொதித்த பின், தீயை குறைத்து ஒரு துணியை வைத்து எண்ணையை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆறியபிறகு பயன்படுத்தலாம்.

செம்பருத்தி செய்வது எப்படி ?

இரண்டு செம்பருத்தி பூக்கள் மற்றும் 7-8 செம்பருத்தி இலைகளை எடுத்து மகரந்தத்தை தவிர்த்து மற்ற அனைத்தையும் பேஸ்ட் போல அரைக்க வேண்டும். பின் இதில் 3 தேக்கரண்டி தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து தலையில் தடவினால் முடி கொட்டுவது உடனடியாக நின்றுவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Homemade Hibiscus hair oil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->